சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் இளம் நடிகை !

  • July 1, 2022 / 06:58 PM IST

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் வரும் கதாநாயகனாக இருக்கிறார் .இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் டான் . இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி
இயக்கி இருந்தார் . இந்த படத்தில் பிரியங்கா மோகன் நாயகியாக நடித்து இருந்தார் . மிகப்பெரிய வெற்றியை இந்த படம் பெற்றுள்ளது.

டான் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்து மிகப்பெரிய சாதனை செய்துள்ளது . இதனால் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது .

இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கு பட இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் ” எஸ்.கே 20 ” படத்தில் நடிக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.காரைக்கால் , பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் விறுவிறுப்பாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது . இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிய உள்ளது . சமீபத்தில் இந்த படத்திற்கு பிரின்ஸ் என்ற தலைப்பு வைத்துள்ளனர் . வருகின்ற தீபாவளிக்கு இந்த படம் வெளியாக இருக்கிறது .

இந்நிலையில் சிவகார்த்திகேயன் மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கிறார் . இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ” கியாரா அத்வானி ” நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருந்தது . தற்போது இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus