தனுஷிற்கு ஜோடியாகும் சூர்யாவின் நாயகி !

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் நடிகர் தனுஷ் முக்கியமானவர் . இவர் நடிப்பில் வெளியான கடைசி படம் மாறன். இந்த படம் ஓ.டி.டியில் வெளியாகி மிகவும் மோசமான விமர்சனங்களை பெற்றது . இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் பல படங்களில் நடித்து வருகிறார் .

குறிப்பாக நீண்ட இடைவெளிக்கு பிறகு செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் என்ற கதையில் நடித்து வருகிறார் தனுஷ் .இந்த படத்தை கலைப்புலி எஸ் .தாணு அவர்கள் தயாரிக்கிறார் . செல்வராகவன் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் . நடிகர் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது . யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார் .இந்துஜா ரவிச்சந்திரன் மற்றும் ஸ்வீடனைச் சேர்ந்த எல்லி அவ்ரம், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் .

இந்த படத்திற்காக உடல் எடையை கூட்டி உள்ளார் தனுஷ் . மயக்கம் என்ன படத்திற்கு பிறகு செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ரசிகர்களிடையே மிக பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

நடிகர் தனுஷ் தற்பொழுது வாத்தி படப்பிடிப்பில் இருக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். அந்த படத்தின் பெயர் கேப்டன் மில்லர் . இந்நிலையில் அந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருந்தது ஆனால் பிரியங்கா மோகனின் கால்ஷூட் இதுவரை கிடைக்கவில்லை அதனால் தெலுங்கில் பிரபலமாக இருக்கும் நடிகை கீர்த்தியை நடிக்க வைக்கலாம் என்ற முடிவில் படக்குழுவினர் உள்ளனர்.

கீர்த்தி தற்போது பாலா இயக்கத்தில் சூர்யா 41 படத்தில் நடித்து வருகிறார் .

Share.