கே.ஜி.எஃப் இசையமைப்பாளிரின் கோலிவுட் என்ட்ரி!!

  • June 17, 2022 / 01:49 AM IST

நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தை இயக்கியவர் இயக்குனர் பாண்டியராஜ். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருந்தது.

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா ,இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க உள்ள வாடிவாசல் படத்தின் டெஸ்ட் ஷூட் சென்னையில் நடந்தது. வெற்றிமாறன் சூரி நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார்.அந்த படம் வெளியான பின் வாடிவாசல் படம் முழுவதுமாக தொடங்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்து முடிந்து உள்ளது . இந்த படத்தில் நடிகர் சூர்யா இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என்றும் ஒரு வேடத்தில் காது கேளாத மற்றும் வாய் பேசாத நபராக நடிக்கிறார் என்ற செய்திகளும் வெளியாக இருந்தன . இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு கோவாவில் நடக்க இருக்கிறது .

இந்நிலையில் சூர்யா அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது . அந்த படம் இரண்டு பாகங்களாக உருவாக இருக்கிறது . மேலும் பிற்காலத்தில் நடக்கும் ஆக்‌ஷன் கதையாக இந்த படம் இருக்கும் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது .

சூர்யா – சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு ஜீலை மாதம் தொடங்க இருக்கிறது. இதனால் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்களின் தேடல் தற்பொழுது நடந்து வருகிறது என்ற தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இந்த படத்திற்கு கே. ஜி. எஃப் படத்திற்கு இசையமைத்த ரவிபசூர் இசையமைக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus