சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை !

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் வரும் கதாநாயகனாக இருக்கிறார் .இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் டான் . இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி
இயக்கி இருந்தார் . இந்த படத்தில் பிரியங்கா மோகன் நாயகியாக நடித்து இருந்தார் . மிகப்பெரிய வெற்றியை இந்த படம் பெற்றுள்ளது . மிக பெரிய வரவேற்பை இந்த படம் ரசிகர்களிடம் பெற்றுள்ளது .

டான் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்து மிகப்பெரிய சாதனை செய்துள்ளது . இதனால் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது .

இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கு பட இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் ” எஸ்.கே 20 ” படத்தில் நடிக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன் . காரைக்கால் , பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் விறுவிறுப்பாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது . இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிய உள்ளது . பாடல்கள் காட்சிகள் தற்பொழுது படப்பிடிப்பில் உள்ளது .

இந்நிலையில் சிவகாத்திகேயன் மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன் . இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ” கியாரா அத்வாணி ” நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது .இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது .

Share.