முன்னணி நடிகருடன் இணையும் லிங்குசாமி !

ஆனந்தம் , ரன் , சண்டக்கோழி போன்ற பல வெற்றிப்படங்களை இயக்கியவர் தான் இயக்குனர் லிங்குசாமி. பையா படத்திற்கு பிறகு இவர் இயக்கிய வேட்டை , அஞ்சான் , சண்டக்கோழி 02 ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. குறிப்பாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அஞ்சான் திரைப்படம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது . இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் சண்டக்கோழி 2 .

இந்த நிலையில் தற்பொழுது இவர் “தி வாரியர் ” என்ற படத்தை தெலுங்கில் இயக்கி வருகிறார் . இந்த படத்தில் ராம் பொத்தினேனி நாயகனாக நடித்து வருகிறார் . இந்த படத்தினை ஸ்ரீநிவாஸ் சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது . படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிவடைந்து விட்டது .

“தி வாரியர் ” படம் மிக பெரிய பட்ஜெட்டில் உருவாகி இருக்கிறது. இந்த படம் வருகின்ற ஜூலை 14-ஆம் தேதி வெளியாகும் என தெரிகிறது . மேலும் இந்த படத்தை தெலுங்கில் மட்டுமில்லாமல் தமிழ் ,மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் பான் இந்திய படமாக வெளியாக உள்ளது .மேலும் “தி வாரியர் ” படத்திற்காக
சிம்பு ஒரு பாடலை பாடியுள்ளார் .

இந்நிலையில் புஷ்பா படத்திற்கு பிறகு அல்லு அர்ஜுன் அடுத்த படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறார் . அந்த வகையில் இயக்குனர் லிங்குசாமியுடன் தற்பொழுது பேசி உள்ளார் அல்லு அர்ஜுன் . இருவரும் நீண்ட நேரம் பேசி உள்ளனர் . விரைவில் அல்லு அர்ஜுனுக்கு கதை தயார் செய்து அல்லு அர்ஜுனிடம் லிங்குசாமி கூறப்போகிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது .

Share.