அஜித் – அர்ஜுன் சந்திப்பு காரணம் என்ன ?

  • November 22, 2022 / 12:40 PM IST

நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் துணிவு . நேர்கொண்ட பார்வை , வலிமை படத்திற்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணைந்து உள்ளது . போனி கபூர் இந்த படத்தை தயாரித்து வருகிறார் . இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் . நடிகர் சமுத்திரக்கனி , நடிகை மஞ்சு வாரியர் இந்த படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்து உள்ளனர் .

2023 -ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .உதயநிதி ஸ்டாலின் இந்த படத்தை தமிழ்நாட்டில் வெளியிடுகிறார் . பாடல் காட்சிகள் மட்டும் இன்னும் படமாக்க படவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது . தற்போது டப்பிங் பணிகள் விரைவாக நடந்து வருகிறது . நடிகர் அஜித் தனது டப்பிங் பணிகளை முடித்து விட்டார் .

இந்நிலையில் நடிகர் அஜித் மற்றும் அர்ஜுன் சந்தித்துக் கொண்டு எடுத்துக்கொண்ட புகைப்படம் ட்ரெண்ட் ஆகி வருகிறது . இதனால் மங்காத்தா 2 ஆரம்பமாக அதிக வாய்ப்பு உள்ளதாகவும் ரசிகர்கள் பேசி வருகின்றனர் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus