நான் இப்படி தான் படம் தேர்வு செய்கிறேன் !

  • December 23, 2022 / 10:11 AM IST

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக இருப்பவர் பூஜா ஹெக்டெ. சம்பித்தில் இவர் நடிகர் விஜய்யுடன் இணைந்து பீஸ்ட் படத்தில் நடித்து இருந்தார் . இவர் நடமாடிய அரபிக் குத்து பாடலுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது . பீஸ்ட் படத்திற்கு பிறகு இவர் தமிழில் எந்த படத்திலும் நடிக்கவில்லை .

இந்த நிலையில் தற்போது தெலுங்கில் மகேஷ் பாபுவின் 28-வது படத்திலும் , ஹிந்தி மொழியில் இரண்டு படமும் தான் வசம் வைத்துள்ளார் . ஹிந்தியில் ஒரு படம் ரன்வீர் சிங் நாயகனாக நடிக்கும் அந்த படத்தை ரோஹித் ஷெட்டி இயக்குகிறார் . அந்த படத்தின் பெயர் சிர்கஸ் மற்றொரு படம் “கிசி கா பாய் கிசி கா ஜான் ” இந்த படத்தில் சல்மான் கான் நாயகனாக நடித்து வருகிறார் . படத்தை பார்ஹத் சம்ஜி இயக்கி வருகிறார் .

இந்நிலையில் பூஜா ஹெக்டே சமீபத்தில் ஒரு பேட்டி அளித்துள்ளார் அதில் “கதை வலுவாக இருந்தாலும் நான் கேட்ட சம்பளம் தராவிட்டால் அந்த படத்தில் நான் நடிக்காமல் புறக்கணிக்கிறேன் என்று பரவி உள்ள தகவலில் உண்மையில்லை. பணத்தை மட்டுமே குறிக்கோளாக வைத்து நான் நடிக்கவில்லை. அப்படி இருந்திருந்தால் இவ்வளவு தூரம் வந்திருக்க மாட்டேன். இப்போது உள்ள போட்டி உலகில் வந்த வாய்ப்புகளை பயன்படுத்துவது புத்திசாலித்தனம். நல்ல படங்களை தேர்வு செய்ய வேண்டிய அவசியமும் நடிகைகளுக்கு உள்ளது. சம்பளத்தை முக்கியமாக கருதி கிடைத்த கதைகளில் எல்லாம் நடித்தாலும் காணாமல் போய்விடுவோம்” என்று கூறியுள்ளார் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus