மீண்டும் வருகிறார் முருகதாஸ் !

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராய் வலம் வந்தவர் இயக்குனர் முருகதாஸ். ரமணா, தீனா என தனது முதல் இரண்டு படத்திலயே கோலிவுட் ரசிகர்களை தன் பக்கம் திருப்பினார். கஜினி படத்தை இயக்க முருகதாஸ் பல நடிகர்களிடம் கதை சொன்னார். ஆனால் முக்கிய நடிகர்கள் அந்த கதையை நிராகரிக்க வளர்ந்து வரும் நடிகரான சூர்யா அந்த படத்தில் நடித்து முருகதாஸை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றார்.

கஜினியின் வெற்றி அவரை பாலிவுட் வரை இழுத்து சென்றது. பிறகு நடிகர் விஜய்யுடன் இணைந்து துப்பாக்கி படம் எடுத்தார். அந்த படமும் பெரிய வெற்றியை அடைந்தது. அதன் பிறகு மீண்டும் நடிகர் விஜய்யுடன் இணைந்து சர்கார் படம் எடுத்தார். இந்த படம் சுமாரான வெற்றியை பெற்றது.

அதனை தொடர்ந்து இவரந டிகர் ரஜினியை வைத்து தர்பார் படத்தை இயக்கினார். நயன்தாரா ரஜினிக்கு ஜோடியாக நடித்து இருந்தார் . அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் . இந்த படம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை . அதன் பிறகு தற்போது முருகதாஸ் நடிகர் சிலம்பரசன் அவர்களை வைத்து ஒரு படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . இதை பற்றின அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது .

Share.