தனுஷ் ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்ரீட் !

  • July 9, 2022 / 08:01 PM IST

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் நடிகர் தனுஷ் முக்கியமானவர் . இவர் நடிப்பில் வெளியான கடைசி படம் மாறன். இந்த படம் ஓ.டி.டியில் வெளியாகி மிகவும் மோசமான விமர்சனங்களை பெற்றது . இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் பல படங்களில் நடித்து வருகிறார் .

குறிப்பாக நீண்ட இடைவெளிக்கு பிறகு செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் என்ற கதையில் நடித்து முடித்துள்ளார் தனுஷ் . தற்போது வாத்தி படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார் தனுஷ் . மேலும்
திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதுவது , பாடுவது என பல துறைகளிலும் அசத்தி வருகிறார் தனுஷ் . அந்த வகையில் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்து வருகிறார் .

இந்நிலையில் நடிகர் தனுஷ் அவர்களின் பிறந்த நாளான ஜூலை 28 -ஆம் தேதி அன்று நானே வருவேன் படத்தின் டீசர் வெளியாக இருக்கிறது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது . இதனால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள் .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus