நானே வருவேன் படத்தின் புதிய அப்டேட் !

  • August 4, 2022 / 08:13 PM IST

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் நடிகர் தனுஷ் முக்கியமானவர் . இவர் நடிப்பில் தமிழில் வெளியான கடைசி படம் மாறன். இந்த படம் ஓ.டி.டியில் வெளியாகி மிகவும் மோசமான விமர்சனங்களை பெற்றது . இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் பல படங்களில் நடித்து வருகிறார் .

குறிப்பாக நீண்ட இடைவெளிக்கு பிறகு செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் என்ற கதையில் நடித்து முடித்துள்ளார் தனுஷ் . தற்போது வாத்தி படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார் தனுஷ் . இதனை தொடர்ந்து கேப்டன் மில்லர் படத்தில் நடிக்க இருக்கிறார் .


இந்நிலையில் நடிகர் தனுஷ் அவர்களின் பிறந்த நாளான ஜூலை 28 -ஆம் தேதி அன்று நானே வருவேன் படத்தின் டீசர் வெளியாகி இருந்தது. பிறகு நானே வருவேன் படம் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாக உள்ளது என்ற செய்தி வெளியாகி இருந்தது. ஆனால் தற்போது இந்த படம் தீபாவளிக்கு நாளுக்கு தள்ளிப்போக அதிக வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நானே வருவேன் படத்தின் டிரைலர் ஆகஸ்ட் மாதம் 14-ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது . இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus