அஜித்தின் வாலி படத்தின் தழுவலா நானே வருவேன் !

  • September 23, 2022 / 08:25 AM IST

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் நடிகர் தனுஷ் முக்கியமானவர் . இவர் நடிப்பில் வெளியான கடைசி படம் மாறன். இந்த படம் ஓ.டி.டியில் வெளியாகி மிகவும் மோசமான விமர்சனங்களை பெற்றது . இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் பல படங்களில் நடித்து வருகிறார் .

குறிப்பாக நீண்ட இடைவெளிக்கு பிறகு செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் என்ற கதையில் நடித்து முடித்துள்ளார் தனுஷ் . தற்போது வாத்தி படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார் தனுஷ் . மேலும் திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதுவது , பாடுவது என பல துறைகளிலும் அசத்தி வருகிறார் தனுஷ் . அந்த வகையில் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்து வருகிறார் .

இந்நிலையில் நானே வருவேன் படம் செப்டம்பர் மாதம் 29-ஆம் தேதி பொன்னியின் செல்வன் வெளியாகுவதற்கு ஒரு நாள் முன்னர் வெளியாக இருக்கிறது . பொதுவாகவே செல்வராகவன் மற்றும் யுவன் கூட்டணியில் வெளிவரும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெரும் அந்த வகையில் இந்த படத்திலிருந்து வெளியான முதல் பாடல் வீரா சூரா நல்ல வரவேற்பை பெற்றது .

இந்நிலையில் நானே வருவேன் படம் எஸ்.ஜே .சூர்யா இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வாலி படத்தின் கதை மாதிரியே இருக்கும் என்று தற்போது சினிமா வட்டாரங்களில் பேசிக் கொள்கின்றனர் .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus