தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். இப்போது இவர் நடிப்பில் ‘ஜெயிலர், லால் சலாம்’ மற்றும் இயக்குநர் த.செ.ஞானவேல் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கவுள்ள ‘தலைவர் 170’ படத்திற்கு அனிருத் இசையமைக்கவிருக்கிறார். இதனை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ரஜினி போலீஸ் ரோலில் நடிக்கவிருக்கும் இந்த படத்துக்கு ‘வேட்டையன்’ என டைட்டில் வைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும், மிக முக்கிய ரோலில் முன்னணி பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடிக்கவிருக்கிறார்.
இதன் ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் ஜெட் ஸ்பீடில் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், இதில் தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோ நானியும் நடிக்கவிருப்பதாக தண்டோரா போடப்படுகிறது. தற்போது, இது குறித்து நம்பத்தகுந்த வட்டாரங்களில் விசாரிக்கையில், நானியை இப்படத்தில் நடிக்க இயக்குநர் ஞானவேல் அணுகியிருந்தாராம், ஆனால் நானி நடிக்க மறுத்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது.