தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நயன்தாரா . இவர் 20 ஆண்டை சினிமா துறையில் நிறைவு செய்துள்ளார். சொந்த வாழ்க்கையில் சில காலம் இவர் பிரச்சனைகளை சந்தித்து இருந்தாலும் பின்பு அதில் இருந்து மீண்டு வந்து பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார் .
சமீபத்தில் இவர் நடிப்பில் கனெக்ட் என்ற ஹாரர் படம் வெளியானது. இந்த படம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை.கல்யாணத்திற்கு பிறகு இவர் தனது 75-வது படத்தில் நடிக்க உள்ளார். மேலும் பாலிவுட் படமான ஜவான் படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நயன்தாரா சினிமாவில் இருந்து விலக போவதாக ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வருடம் ஜூன் மாதம் இவருக்கு இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் திருமணம் ஆனது . பிறகு வாடகை தாய் மூலம் இவர்களுக்கு இரட்டை குழந்தை பிறந்தது .தனது இரட்டை குழந்தைகளை பார்த்துக் கொள்வதற்காக நயன்தாரா சினிமாவில் இருந்து விலக போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாகவும், கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு, இனி தயாரிப்பில் மட்டுமே கவனம் செலுத்த முடிவு எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.