அஜித்துடன் இணைகிறாரா நித்யா மேனன் ?

  • August 25, 2022 / 07:40 PM IST

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித் குமார் . இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் வலிமை . இந்த படத்தை இயக்கியவர் ஹச்.வினோத் . இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை . அதனை தொடர்ந்து நடிகர் அஜித் மீண்டும் ஹச். வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து கொண்டிருக்கிறார் . மேலும் அஜித் அதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க உள்ளார் . அந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது .

இந்நிலையில் நடிகர் அஜித் நடிக்கும் அவரது 61-வது படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாதில் நடந்து முடிந்து உள்ளது . இந்த படத்தின் கதை வங்கி கொள்ளையை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது . மேலும் இந்த படத்திற்காக ஒன்பது ஏக்கரில் வங்கி செட் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது .

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவாக நடந்து கொண்டு இருக்கிறது . டிசம்பர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு முடியம் என்று நம்பப்படுகிறது . நடிகை மஞ்சு வாரியர் இந்த படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் . இந்நிலையில் தற்போது நித்யா மேனன் இந்த படத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . இது தொடர்பாக படக்குழு நித்யா மேனனிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus