துணிவு படத்திற்காக திரையரங்குகள் எடுத்த அதிரடி முடிவு !

  • November 25, 2022 / 12:14 AM IST

நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் துணிவு . நேர்கொண்ட பார்வை , வலிமை படத்திற்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணைந்து உள்ளது . போனி கபூர் இந்த படத்தை தயாரித்து வருகிறார் . இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் . நடிகர் சமுத்திரக்கனி , நடிகை மஞ்சு வாரியர் இந்த படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்து உள்ளனர் .

2023 -ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .உதயநிதி ஸ்டாலின் இந்த படத்தை தமிழ்நாட்டில் வெளியிடுகிறார் . பாடல் காட்சிகள் மட்டும் இன்னும் படமாக்க படவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது . தற்போது டப்பிங் பணிகள் விரைவாக நடந்து வருகிறது . நடிகர் அஜித் தனது டப்பிங் பணிகளை முடித்து விட்டார் .

துணிவு படத்தின் முதல் பாடல் பற்றின தகவல் வெளியாகி உள்ளது . ஜிப்ரான் இசையில் ” சில்லா சில்லா ” என்கிற பாடலை அனிருத் பாடியுள்ளார் . இந்த பாடலை வைசாக் என்பவர் எழுதி உள்ளார் . சமீபத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ‘ காக்கா கதை ‘ பாடலை எழுதியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது .

இது குறித்து சமீபத்தில் பேசிய இசையமைப்பாளர் ஜிப்ரான் ” சில்லா சில்லா ” பாடல் பக்கா மாஸாக இருக்கும் என்று தெரிவித்து இருந்தார் . இந்நிலையில் துணிவு படத்தை நள்ளிரவு 1 மணிக்கு திரையிட அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .பொதுவாக அஜித் படங்களுக்கு அதிகாலை காட்சி இருக்கும் இந்த முறை நள்ளிரவு காட்சிக்கு அதிக வாய்ப்பு உள்ளதால் அஜித் ரசிகர்கள் தற்போது உற்சாகத்தில் உள்ளனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus