நட்சத்திரம் நகர்கிறது படம் எப்பொழுது வெளியாகும் ?

  • July 4, 2022 / 04:22 PM IST

இயக்குனர் பா .ரஞ்சித் இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் சார்பட்டா பரம்பரை .இந்த படத்தில் ஆர்யா , பசுபதி , ஜான் விஜய் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தனர் . சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் . திரையரங்கில் வெளியாகும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் படம் அமேசான் ஓடிடி -யில் வெளியாகி நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது .

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விக்ரமை வைத்து ஒரு படம் ரஞ்சித் இயக்க உள்ளதாக தகவல் வெளியானது. நடிகர் விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளியான படம் மகான் . இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார் . பாபி சிம்ஹா , சிம்ரன் , துருவ் விக்ரம் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர் .மகான் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில் ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் செய்தி வெளியாகி இருக்கிறது . மேலும் இந்த படம் விளையாட்டை மையமாக வைத்து எடுக்க உள்ளதாகவும் அந்த படத்திற்கு மைதானம் என்ற தலைப்பை வைக்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது .

ஜூலை மாதம் 15-ஆம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது . மிகப்பெரிய பட்ஜெட்டில் பீரியட் ஆக்ஷன் படமாக இந்த படம் உருவாக உள்ளது .மேலும் இந்த திரைப்படம் 3டி பதிப்பையும் கொண்டிருக்கும் என்ற தகவலும் வெளியாகி இருந்தது .

இந்நிலையில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் நட்சத்திரம் நகர்கிறது .காளிதாஸ் ஜெயராம் நாயகனாக இந்த படத்தில் நடித்து இருக்கிறார் நாயகியாக துஷாரா விஜயன் நடித்து இருக்கிறார் . இந்நிலையில் இந்த படத்தை ஆகஸ்ட் மாதம் வெளியிடலாம் என்று படக்குழு திட்டமிட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus