தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகராக இருந்தவர் பிரபாஸ் . இயக்குனர் ராஜமௌலி இயக்கிய பாகுபலி படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார் . தற்போது பான் இந்தியா ஸ்டாராக உள்ள பிரபாஸ் அதிபுருஷ் படத்தில் நடித்து முடித்துள்ளார் . இந்த படம் அடுத்த ஆண்டு திரைக்கு வர இருக்கிறது .
பாகுபலி படம் வெளியான பிறகு நடிகர் பிரபாஸும் , அனுஷ்காவும் காதலிப்பதாக தகவல் பரவியது ஆனால் அந்த தகவலை இருவரும் உறுதிப்படுத்தவில்லை . இந்நிலையில் தற்போது இந்தி நடிகை கிருத்தி சனோனும், பிரபாசும் காதலிப்பதாக புதிய தகவல் தெலுங்கு திரையுலகில் பேசப்பட்டு சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது
ஆதிபுருஷ் படத்தில் ராமர் வேடத்தில் பிரபாஸ் நடிக்கிறார். சீதை கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகை கிருத்தி சனோன் நடிக்கிறார். படப்பிடிப்பில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் கிருத்தி சனோன் அளித்த பேட்டி ஒன்றில் , ”பிரபாஸை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்” என்று கூறியிருந்தார். எனவே இந்த தகவல் உண்மையாக இருக்கும் என்று கூறப்படுகிறது .