பிரபு சாலமன் இயக்கத்தில் அஸ்வின் குமார் !

  • May 20, 2022 / 02:01 AM IST

1999-வது ஆண்டு வெளியான கண்ணோடு காண்பதெல்லாம் என்கிற படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் பிரபு சாலமன் . இந்த படத்தை தொடர்ந்து கிங் , கொக்கி ,லீ , லாடம் என் அடுத்து அடுத்து படங்கள் இயக்கி இருந்தாலும் தமிழ் சினிமாவில் இவரை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்ற படம் மைனா.

2010-ஆம் ஆண்டு வெளியான மைனா மிகப்பெரிய வெற்றியை பெற்றது . விதார்த் நாயகனாகவும் , அமலா பால் நாயகியாகவும் நடித்து இருந்தனர் . இமான் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார்.தம்பி ராமையா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் . மைனா படத்திற்கு பிறகு கும்கி என்கிற படத்தை இயக்கினார் பிரபு சாலமன் . அந்த படத்தில் நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு கதாநாயகனாக அறிமுகமானார். கதாநாயகியாக நடிகை லட்சுமி அறிமுகமானார் .இந்த படத்திற்கும் இமான் இசையமைத்து இருந்தார் . இந்த படத்தில் இருந்து வெளியான அனைத்து பாடல்களும் ஹிட் அடித்தது படமும் நல்ல வரவேற்பை பெற்றது .

இதனை தொடர்ந்து கயல் , தொடரி ,காடன் ஆகிய படங்களை இயக்கி இருந்தார் பிரபு சாலமன். இதில் கயல் படம் மட்டும் நல்ல வரவேற்பை பெற்றது .இந்நிலையில் பிரபு சாலமன் தற்பொழுது குக் வித் கோமாளி மூலம் பிரபலமான நடிகர் அஸ்வின் குமாரை வைத்து படம் இயக்கி வருகிறார் . அந்த படத்தின் முதல் பார்வை வருகின்ற மே 20-ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகி இருக்கிறது .

நடிகர் அஸ்வின் குமாரின் முதல் பார்வை பார்ப்பதற்கு நீங்க எவ்வளவு ஆர்வமா இருக்கீங்க என்பதை கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus