தமிழ் சினிமாவில் நாற்பது படங்களுக்கு மேலாக முன்னணியில் இருக்கும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் அண்ணாத்த . இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருந்தார்.இமான் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் . சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருந்தது. இந்த படம் பெரியதாக வெற்றி பெறவில்லை .
பொதுவாக ரஜினிகாந்த் தமிழில் ஏதாவது படம் பார்த்துவிட்டு அது அவருக்கு மிகவும் பிடித்திருந்தால் உடனே அந்த படக்குழுவிற்கு தனது பாராட்டை தெரிவிப்பார் . அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் சிபி சக்கரவர்த்தியை பாராட்டி இருந்தார் . பிறகு சிபி சக்கரவர்த்தி ரஜினிக்கு கதை கூறியுள்ளார் அந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது என்ற செய்தி வெளியாகி இருந்தது . சில நாட்களுக்கு முன் சிபி சொன்ன முழு கதை ரஜினிக்கு பிடிக்கவில்லை என்றும் அதனால் அந்த கதையை நிராகரித்துவிட்டார் என்று கூறப்பட்டது மேலும் ரஜினியின் 171 படத்தை யார் இயக்க உள்ளார் என்ற கேள்வி ரசிகர்களிடம் இருந்தது .
தற்போது லைக்கா நிறுவனம் லவ் டுடே இயக்குநர் பிரதீப் ரங்கநாதனை வைத்து ரஜினிக்கு கதை சொல்லும் முயற்ச்சியை தொடங்கி உள்ளது என்று கூறப்படுகிறது . பிரதீப் சொல்லும் கதை ரஜினிக்கு பிடித்து இருந்தால் ரஜினியின் 171 படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் என்பது உறுதியாகி விடும் .
இந்நிலையில் சமீபத்தில் முழு கதையும் கேட்ட ரஜினிகாந்த் சிபி சக்கரவர்த்தி கதையை நிராகரித்து விட்டார் என்று கூறப்படுகிறது . இதனால் தலைவர் 171 படத்தை இயக்கப்போவது யார் என்ற கேள்வி ரசிகர்களுக்கு எழுந்து உள்ளது .