2015-ஆம் ஆண்டு வெளியான படம் டிமான்ட்டி காலனி . இந்த படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து . இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு இவர் இயக்கிய படம் இமைக்கா நொடிகள் . நயன்தாரா , அதர்வா , அனுராக் காஷ்யப் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்து இருந்தனர் . இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றது . இந்த படத்தை தொடர்ந்து கோப்ரா என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார் அஜய் ஞானமுத்து.
கோப்ரா படத்தில் நடிகர் விக்ரம் நடித்து இருக்கிறார் . ஸ்ரீநிதி , மிருணாளினி ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர் . ஏ .ஆர் . ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் . இந்த படத்திலிருந்து வெளியான தும்பி , தும்பி பாடலும் அதீரா என்கிற பாடலும், சமீபத்தில் வெளியான உயிர் உருகுதே பாடலும் நல்ல வரவேற்பை பெற்றது . முன்னதாக இந்த படத்தின் டீசர் ஒரு வருடத்திற்கு முன்பு வெளியாகி இருந்தது . அதன் பிறகு ஆகஸ்ட் மாதம் 11-ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என்று அறிவித்து இருந்தனர் ,
இந்நிலையில் கோப்ரா படத்தின் ஆடியோ ரிலீஸ் ஜூலை 11-ம் தேதி சென்னையில் உள்ள ஒரு பிரபல மாலில்
நடைபெற்றது .தற்போது இப்படத்தின் கிராபிக்ஸ் அதிகமாக இருப்பதால் திட்டமிட்டபடி பணிகள் முடியாமல்
இருந்தது அதனால் கோப்ரா படம் ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது .
இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதி வெளியான படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதனால் படத்தின் வசூல் பாதித்துள்ளது . மேலும் படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து சொன்ன பட்ஜெட்டில் படம் எடுக்கவில்லை என்றும் , சொன்ன தேதியிலும் படத்தை எடுக்கவில்லை என்றும் அவர் மீது புகார் கொடுக்க பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்கிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தயாரிப்பாளர் சங்கம் அவருக்கு ரெட் கார்டு கொடுக்க உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.
When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.