ரஜினியின் கடைசி படம் ! சோகத்தில் ரசிகர்கள் !

  • February 16, 2023 / 08:44 AM IST

இந்திய சினிமாவில் மிகப்பெரிய ஆளுமையாக இருக்கும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் . அண்ணாத்த படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ஜெயிலர் . இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார் . சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறார் . அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் .

மோகன் லால் , ஷிவ்ராஜ் குமார் , ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து வருகிறார்கள் .சமீபத்தில் ஜாக்கி ஷெரீப் ஜெயிலர் படத்தில் இணைந்தார் .

இந்நிலையில் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சந்திப்பு நடந்து உள்ளது . விஜய் மற்றும் அர்ஜுன் நடிக்கும் லியோ படத்தை தற்போது லோகேஷ் இயக்கி வருகிறார் . இந்த படத்தின் படப்பிடிப்பிற்கு போவதற்கு முன் லோகேஷ் ரஜினிகாந்தை சந்தித்து உள்ளனர் . ஏற்கனவே ரஜினி லோகேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க வேண்டியது பின்பு கொரோனா காரணத்தினால் அந்த படம் தள்ளிப்போனது . இந்நிலையில் ரஜினி லோகேஷ் இயக்கும் படம் தான் தனது கடைசி படமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார் . லோகேஷ் லியோ படத்தை முடித்த பின் கைதி மற்றும் விக்ரம் 2 ஆகிய படங்களை இயக்க உள்ளார் . ஆனால் ரஜினி கமலிடம் பேசி விக்ரம் 2 படத்தை தள்ளி வைக்க முயல்வதாக லோகேஷிடம் கூறி உள்ளார் . ரஜினி நட்பு ரீதியாக கேட்டுக்கொண்டாள் கமல் அதற்கு ஓகே சொல்லிவிடுவார் .

ஆனால் கைதி படத்தை தள்ளி வைக்க தயாரிப்பாளர் எஸ் .ஆர்.பிரபு சம்மதிப்பாரா என்ற கேள்வி எழுந்து உள்ளது . மேலும் லோகேஷிடம் ரஜினி கடைசி படம் பற்றி பேசி உள்ளார் . இந்த செய்தி ரசிகர்களுக்கு சோகத்தை தந்து உள்ளது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus