தலைவர் 169 படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறாரா ?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான படம் அண்ணாத்த . இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருந்தார் . கடந்த தீபாவளிக்கு வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது . சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருந்தது . இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படமான அவரது 169 வது படத்தையும் சன் பிக்சர்ஸ் தான் தயாரிக்க இருக்கிறது .

தலைவர் 169 படத்தை கோலமாவு கோகிலா , டாக்டர் , பீஸ்ட் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார்
இயக்க உள்ளார் . இந்த படத்தின் ஆரம்பகட்ட வேலைகள் தற்பொழுது நடந்து வருகிறது . ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது என்று கூறப்படுகிறது .

இந்நிலையில் படையப்பா படத்தில் ரஜினிகாந்துடன் நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகி இருக்கிறது . இதுவரையில் படக்குழு யார் யார் நடிக்க இருக்கிறார்கள் என்ற அதிகார்வப்பூர்வ அறிவிப்பு வரவில்லை ஆனால் ரம்யா கிருஷ்ணன் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்தால் நன்றாக இருக்கும் என்பது ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது .

Share.