தனுஷுடன் நடிக்க உள்ளாரா ராஷ்மிகா மந்தனா ?

  • October 11, 2022 / 07:11 PM IST

நடிகர் விஜய் நடிக்கும் அடுத்த படமான வாரிசு ( தளபதி 66) படத்தின் பூஜை சென்னையில் சில மாதங்களுக்கு முன்னர் நடந்தது . அதன் பிறகு படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் சில நாட்கள் நடந்தது . அதன் பிறகு படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து முடிந்துள்ளது.

இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்து வருகிறார் . தோழா படத்தை இயக்கிய இயக்குனர் வம்சி இந்த படத்தை இயக்கி வருகிறார் . மேலும் இந்த படத்தில் நடிகர்கள் சரத்குமார் , பிரகாஷ் ராஜ் , பிரபு , நடிகை ஜெயசுதா , நடிகை சங்கீதா மற்றும் பிக் பாஸ் புகழ் சம்யுக்தா ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியானது . முழுக்க முழுக்க குடும்ப படமாக இந்த படம் உருவாக இருக்கிறது .


விஜய் மற்றும் ராஷ்மிகா முதல் தடவை சேர்ந்து நடிப்பதால் ரசிகர்களுக்கு இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது . இந்நிலையில் ராஷ்மிகா நடிகர் தனுஷுடன் முதல் முறையாக இணையப்போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது .இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் ஜனவரி மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் நடிக்க ராஷ்மிகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது படக்குழு என்ற செய்தி கோலிவுட் வட்டாரங்களில் உலா வருகிறது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus