கஸ்தூரி மான் , தாம் தூம் ஆகிய படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தவர் நடிகை சாய் பல்லவி. அதன் பிறகு பிரேமம் என்கிற மலையாள படம் மூலம் நாயகியாக அறிமுகமானார் . தமிழ் , தெலுங்கு ,மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் சாய் பல்லவிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது . நேரடி தமிழ் திரைப்படம் நடிப்பதற்கு முன்பே தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார் . பிரேமம் படத்திற்கு பிறகு களி என்கிற படத்தில் நடித்தார் அதன் பிடா என்கிற தெலுங்கு படத்தில் நடித்து இருந்தார் . தமிழில் தியா என்கிற படத்தில் நடித்தார் , நடிகர் தனுஷுடன் இணைந்து மாறி 2 , சூர்யாவுடன் இணைந்து என்.ஜி.கே உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார் .
நீண்ட இடைவேளைக்கு பிறகு சாய் பல்லவி தற்போது தமிழ் படத்தில் நடித்து இருந்தார் . அந்த படத்தின் பெயர் கார்கி . கவுதம் இராமச்சந்திரன் இந்த படத்தை இயக்கி உள்ளார் . நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் இந்த படத்தை சக்தி பிலிம் நிறுவனத்துடன் இணைந்து வெளியிட்டது .திரையரங்கில் வெளியான இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது . இந்த படம் வெளியான பின்பு சாய் பல்லவி பாராட்டு மழையில் நினைந்தார்.
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனின் தந்தையும் பிரபல தயாரிப்பாளருமான அல்லு அரவிந்த் ராமாயணத்தை ஹிந்தியில் தயாரிக்கப்போவதாக அறிவித்திருந்தார். இதில் ராமராக ரன்பீர் கபூரும், ராவணனாக ஹிருத்திக் ரோஷனும் நடிப்பதாக உறுதியாகி உள்ளது. இதில் சீதையாக தீபிகா படுகோனே நடிப்பதாக இருந்தது. இந்த படத்திற்கு நீண்ட நீண்ட நாள் கால்ஷீட் ஒதுக்க வேண்டும் என்பதால் தீபிகா படுகோனே விலகி விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான் சீதையாக சாய்பல்லவியை நடிக்க வைக்க அல்லு அரவிந்த் முடிவு செய்திருக்கிறார். இதற்கான முதல்கட்ட பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளது. சாய்பல்லவி தரப்பில் படத்தின் ஸ்கிரிப்டை படிக்க கேட்டுள்ளனர். “சீதை கேரக்டரில் நடிப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் ஹிந்தியில் படமாவதால் சரியாக நடிக்க முடியும் என்கிற நம்பிக்கை வரவேண்டும். ஸ்கிரிப்டை படித்து முடித்ததும் அந்த நம்பிக்கை கிடைத்தால் நடிப்பார்” என்கிறது சாய்பல்லவி தரப்பு.