ஒரே படத்தில் சிம்பு மற்றும் தனுஷ் !! யார் இயக்குனர் தெரியுமா ?

  • October 17, 2022 / 09:33 PM IST

தமிழ் மிக முக்கியமான நடிகர்களில் நடிகர் தனுஷ் மற்றும் சிம்பு . இருவரும் ரசிகர்களால் போட்டியாளர்களாக பார்க்கப்படுகிறார்கள் . ஆனால் இருவரும் நல்ல நண்பர்கள் என்று பல மேடைகளில் தெரிவித்து உள்ளனர் . தனுஷ் தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து பாலிவுட் , ஹாலிவுட் என புகழ் அடைந்து உள்ளார் . ஆனால் சிம்பு சில வருடங்கள் தனது திரை வாழ்க்கையில் பல பிரச்சனைகளையும் , எதிர்மறை விமர்சனங்களையும் சந்தித்து வந்தார் .

ஆனால் கண்டது இரண்டு வருடமாக மீண்டும் கடினமாக உழைக்க தொடங்கினார் .தனது உடல் எடையை குறைத்தார் . மேலும் இவரது நடிப்பில் வெளியான மாநாடு படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது . அதனை தெடர்ந்து வெளியாகி வெந்து தணிந்தது காடு படமம் நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது . நடிகர் சிம்பு தற்போது பத்து தல படத்தில் நடித்து வருகிறார் . நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் மற்றும் நநே வருவேன் படம் வெற்றிகரமாக திரையில் ஓடிக்கொண்டு இருக்க தற்போது தனுஷ் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார் .

தனுஷும் சிம்புவும் ஒரு புதிய படத்திற்காக இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அந்த படத்திற்கு இருவரும் கதை, திரைக்கதை மற்றும் வசனங்களையும் சேர்ந்தே எழுதுகிறார்கள் என்றும் நடிகர் தனுஷ் இந்த படத்தை இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது . மேலும் கதை தொடர்பான விவாதங்களில் நடிகர் தனுஷ் மற்றும் சிம்பு அடிக்கடி பிரபல ஹோட்டலில் சந்தித்து வருகிறார்கள் என்ற செய்தியும் வெளியாகி உள்ளது .

தனுஷ் மற்றும் சிம்பு இணைந்து நடிக்கும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு நடிகர்களும் ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளனர் , இருவரும் இணைந்தால் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய படங்களில் ஒன்றாக இது இருக்கும் என்று நம்பலாம் . இருப்பினும், இது தொடர்பாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus