விஜய்க்கு போட்டியாக களம் இறங்குகிறாரா சிவகார்த்திகேயன் ?

  • February 20, 2023 / 07:18 PM IST

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் வரும் கதாநாயகனாக இருக்கிறார் .இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் பிரின்ஸ் . இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கிறார் . இந்த படத்தின் தலைப்பு மாவீரன் என்று அறிவித்து இருந்தனர்

மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக மிஷ்கின் நடித்து வருகிறார் . அதில் சட்டமன்ற உறுப்பினராக நடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது . மாவீரன் படம் அரசியல் சார்ந்த படமாக இருக்கும் என்ற எண்ணமும் ரசிகர்களிடம் எழுந்து உள்ளது .

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு மாவீரன் படத்தின் சீனா சீனா என்கிற பாடல் வெளியாகி உள்ளது . பரத் சங்கர் இசையில் அனிருத் குரலில் வெளியாகி உள்ள இந்த பாடலை கபிலன் மற்றும் பரத் ஷங்கர் எழுதி உள்ளனர் . ரசிகர்களிடம் இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

பொதுவாக சிவகார்த்திகேயன் அவரது படத்தை ஆயுத பூஜை பண்டிகை தினத்தில் வெளியிட விரும்புவார் .முன்னதாக இந்த ஆண்டு அந்த தினத்தில் விஜய்யின் லியோ படம் வெளியாக உள்ளது என்று அறிவிப்பு வெளியாகி இருந்தது . இதனால் லியோ படத்துடன் மாவீரன் படம் வெளியாகும் என்று நம்பப்பட்டது .

இந்நிலையில் மாவீரன் படத்தை ரெட் ஜெயிண்ட் நிறுவனம் தமிழகத்தில் வெளியிடுகிறது . பக்ரீத் பண்டிகையில் ஜூன் 29 ஆம் தேதி அன்று இந்த படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது . இதனால் லியோ படத்துடன் மாவீரன் படம் வெளியாகாது என்பது தெரியவந்துள்ளது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus