இந்திய கிரிக்கெட் வீரரின் பயோ பிக்சரில் சிவகார்த்திகேயன் ?

  • October 12, 2022 / 10:06 PM IST

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் வரும் கதாநாயகனாக இருக்கிறார் .இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் டான் . இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கி இருந்தார் . இந்த படத்தில் பிரியங்கா மோகன் நாயகியாக நடித்து இருந்தார் . மிகப்பெரிய வெற்றியை இந்த படம் பெற்றுள்ளது.

டான் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்து மிகப்பெரிய சாதனை செய்துள்ளது . இதனால் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது .

இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கு பட இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் ” பிரின்ஸ் ” படத்தில் நடித்து முடித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.காரைக்கால் , பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் விறுவிறுப்பாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது . பிரின்ஸ் படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இந்த படம் 21-ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ளது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கும் மாவீரன் படத்தில் நடிக்கிறார் . தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது . அதிதி ஷங்கர் இந்த படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் .

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் அவரின் பயோ பிக் படத்தில் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது . இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது . விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று நம்பலாம் .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus