கிரிக்கெட் பிளேயரின் பயோபிக் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் !

  • December 16, 2022 / 04:19 PM IST

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் வரும் கதாநாயகனாக இருக்கிறார் .இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் பிரின்ஸ் . இந்த படத்தை தெலுங்கு பட இயக்குனர் அனுதீப் இயக்கி உள்ளார் . தீபாவளி விழாவை முன்னிட்டு இந்த படம் வெளியாகி இருந்தது . மிக பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது

சிவகார்த்திகேயன் தற்போது மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கிறார் . இந்த படத்தின் தலைப்பு மாவீரன் என்று அறிவித்து இருந்தனர் . முதலில் இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருந்தது . ஆனால் பின்பு அந்த தகவல் பொய் என்று கூறப்பட்டது .

தற்போது மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக மிஷ்கின் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது . அதில் சட்டமன்ற உறுப்பினராக நடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது . மாவீரன் படம் அரசியல் சார்ந்த படமாக இருக்கும் என்ற எண்ணமும் ரசிகர்களிடம் எழுந்து உள்ளது .

இந்நிலையில் பிரின்ஸ் படத்தின் தோல்வி காரணமாக நடிகர் சிவகார்த்திகேயன் அப்செட்டில் உள்ளார் . இதனால் மாவீரன் படம் நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளார் .மாவீரன் படத்தின் படபிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது . அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

இது ஒரு பக்கம் இருக்க நடிகர் சிவகார்த்திகேயன் இந்திய கிரிக்கெட் பிளேயர் நடராஜன் வாழ்க்கையை பயோபிக் படமாக இயக்க உள்ளார் என்று அதில் அவரே நாயகனாக நடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus