Ayalaan : சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ தெலுங்கு வெர்ஷன் ரிலீஸ் தள்ளிப்போகிறதா?… தீயாய் பரவும் தகவல்!

  • January 9, 2024 / 02:14 PM IST

டிவி டு சினிமா வந்து சில ஆண்டுகளிலேயே முன்னணி ஹீரோக்களின் லிஸ்டில் இடம் பிடித்து மாஸ் காட்டியவர் சிவகார்த்திகேயன். இப்போது இவர் நடிப்பில் ‘அயலான்’, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படம், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் சயின்ஸ்-ஃபிக்ஷன் படமான ‘அயலான்’-ஐ இயக்குநர் ரவிக்குமார் இயக்க, ஹீரோயினாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். மேலும், முக்கிய ரோல்களில் இஷா கோபிகர், ஷரத் கெல்கர், யோகி பாபு, கருணாகரன், பானுப்ரியா, பால சரவணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் வலம் வரும் ஏலியன் கேரக்டருக்கு நடிகர் சித்தார்த் குரல் கொடுத்துள்ளார். இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சமீபத்தில், ரிலீஸ் செய்யப்பட்ட இதன் GLIMPSE, டீசர், பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்தது. முதலில் படத்தை வருகிற ஜனவரி 12-ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டிருந்தனர். தற்போது, இப்படத்தின் தெலுங்கு வெர்ஷன் ரிலீஸ் மட்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus