சோனியா அகர்வாலுக்கு 2-வது திருமணமா?… அவரே போட்ட ட்வீட்!
July 23, 2020 / 12:25 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் ‘காதல் கொண்டேன்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் சோனியா அகர்வால். தனுஷ் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தை செல்வராகவன் இயக்கியிருந்தார். இப்படம் சூப்பர் ஹிட்டானதும், இதனைத் தொடர்ந்து ‘கோவில், மதுர, 7/G ரெயின்போ காலனி, திருட்டு பயலே, புதுப்பேட்டை’ போன்ற பல படங்களில் நடித்தார் சோனியா அகர்வால்.
2006-ஆம் ஆண்டு இயக்குநர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சோனியா அகர்வால். பின், செல்வராகவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2010-ஆம் ஆண்டு சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றுக் கொண்டார் சோனியா அகர்வால். அதன் பிறகு மீண்டும் ‘வானம், தடம், அயோக்யா’ போன்ற சில படங்களில் சோனியா அகர்வால் நடித்தார்.
தற்போது, சோனியா அகர்வால் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தையும், வீடியோவையும் வெளியிட்டுள்ளார். இப்புகைப்படத்திலும், வீடியோ பதிவிலும் திருமணம் நடப்பது போல் காட்டப்பட்டிருப்பதால், சோனியா அகர்வாலுக்கு இரண்டாவது திருமணமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த வீடியோவின் முடிவில் இன்னும் 3 நாட்களில் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உண்மையாகவே திருமணம் தொடர்பான அறிவிப்பா? அல்லது அவர் நடிக்கப்போகும் புதிய திரைப்படம் அல்லது சீரியல் குறித்த அறிவிப்புக்கான ப்ரோமோவா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.