திரைப்படமாக போகிறதா ரத்தன் டாட்டாவின் வாழ்கை ?

  • November 22, 2022 / 11:36 PM IST

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியான படம் சூரைப்போற்று . இந்த படத்தை இயக்கியவர் சுதா கொங்கரா . அபர்ணா பாலமுரளி இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து இருந்தார். ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் . மிக பெரிய வரவேற்பை இந்த படம் சூர்யாவுக்கு பெற்று தந்தது . மோகன் பாபு இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டேர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்தது . இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யப் போகிறார்கள் என்ற தகவல் வெளியானது .

இந்த நிலையில் சூரரைப்போற்று படத்தின் ரீமேக்கை நடிகர் சூர்யா மற்றும் விக்ரம் மல்ஹோத்ரா ஆகியோர் இணைந்து தயாரிக்க உள்ளனர் . இந்த நிலையில் இந்த படத்தின் பூஜை மும்பையில் நடந்து உள்ளது . சூர்யா நடித்த மாறன் கதாபாத்திரத்தில் அக்‌ஷய் குமார் நடித்து வருகிறார் . நடிகை அபர்ணா பாலமுரளி நடித்த கதாபாத்திரத்தில் ராதிகா மதன் நடித்து வருகிறார்.

இந்த படத்திற்கும் ஜி.வி.பிரகாஷ் தான் இசையமைக்கிறார் . மேலும் இந்த படத்திற்கு புதிதாக பின்னணி இசையும் பாடலும் தயாராகி கொண்டு இருப்பதாக ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார் . மேலும் இந்த படத்தில் நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் . இந்த படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது . இந்நிலையில் தற்போது சுதா கொங்கரா பிரபல தொழிலதிபர் ரத்தன் டாட்டா அவர்களின் வாழ்க்கையை படமாக எடுக்க போகிறார் என்றும் அந்த படத்தில் சூர்யா அல்லது அபிஷேக் பச்சன் நடிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus