கடந்த 2005-ஆம் ஆண்டு நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான படம் கஜினி . ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் . நடிகை அசின் நாயகியாக நடித்து இருக்க மற்றுமொரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை நயன்தாரா நடித்து இருந்தார் . இந்த படம் நடிகர் சூர்யா , நடிகை அசின் , இயக்குனர் முருகதாஸ் ஆகிய மூன்றுபேருக்கும் தங்களது திரைவாழ்க்கையில் முக்கியமான படமாய் அமைந்தது .
இயக்குனர் முருகதாஸ் கஜினி படத்தின் கதையை 12 நடிகர்களுக்கு கூறி இருக்கிறார் . நடிகர் அஜித் இந்த படத்தில் முதலில் நடிக்க சம்மதம் தெரிவித்து இருந்தார் . மிரட்டல் என்கிற பெயரில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது . அதன் பிறகு சில காரணங்களால் அந்த படத்தில் இருந்து விலகினார் அஜித் . பின்பு அந்த படத்தில் மாதவன் நடிப்பதாக இருந்தார் . ஆனால் அவரும் அந்த படத்தில் நடிக்காமல் போனார்.
இந்நிலையில் தான் நடிகர் சூர்யாவிடம் இந்த கதையை கூறி உள்ளார் இயக்குனர் முருகதாஸ் .நடிகர் சூர்யாவிற்கு கதை பிடித்து போக இதில் நடிக்க ஒப்புக் கொண்டார் நடிகர் சூர்யா . 7 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் 50 கோடி ரூபாய் வசூல் புரிந்து இருக்கிறது . மேலும் கஜினி படம் நடிகர் சூர்யாவிற்கு தெலுங்கு திரைப்பட உலகில் மிக பெரிய மார்க்கெட்டை உருவாக்கியது . பல நேரடி தெலுங்கு படங்களின் வசூலை சூர்யாவின் கஜினி படம் முறியடித்து இருந்தது . மேலும் நடிகர் அமீர் கான் இந்த படத்தை பார்த்து விட்டு ஹிந்தியில் ரீமேக் செய்து நடித்து இருந்தார் .
12 ஹீரோக்கள் நிராகரித்த கதையில் நடித்து மாபெரும் வெற்றியை பெற்று அசத்தினார் நடிகர் சூர்யா. . இந்நிலையில் சர்கார் படத்திற்கு பிறகு பெரிய வாய்ப்பில்லாமல் இருக்கிறார் இயக்குனர் முருகதாஸ். நடிகர் விஜய்யிடம் இவர் சொன்ன கதையை விஜய் நிராகரித்து விட்டார் . அதனை தொடர்ந்து நடிகர் அஜித் அல்லது விக்ரம் ஒருவருடன் இணைந்து படம் செய்ய உள்ளார் முருகதாஸ் என்று செய்திகள் வெளியாகி இருந்த நிலையில் தற்போது நடிகர் சூர்யாவிடம் முருகதாஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது மேலும் அது கஜினி படத்தின் இரண்டாவது பாகமாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும் சினிமா வட்டாரங்களில் பேசி வருகின்றனர் .