ஐந்து கெட்டப்பில் மிரட்டும் சூர்யா !

  • September 10, 2022 / 08:18 PM IST

நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தை இயக்கியவர் இயக்குனர் பாண்டியராஜ். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா ,இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க உள்ள வாடிவாசல் படத்தின் டெஸ்ட் ஷூட் சென்னையில் நடந்தது. வெற்றிமாறன் சூரி நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார்.அந்த படம் வெளியான பின் வாடிவாசல் படம் முழுவதுமாக தொடங்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் சூர்யா தற்பொழுது இயக்குனர் பாலா இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்து முடிந்தது . படத்திற்கு வணங்கான் என்று தலைப்பு வைத்துள்ளனர் .இந்த படத்தில் நடிகர் சூர்யா இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என்றும் ஒரு வேடத்தில் காது கேளாத மற்றும் வாய் பேசாத நபராக நடிக்கிறார் என்ற செய்திகளும் வெளியாகி இருந்தது .

படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோவாவில் அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது . ஆனால் தற்போது இதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது . பாலா மற்றும் சூர்யா கூட்டணியில் உருவாகும் வணங்கான் படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதத்திற்கு தள்ளிப்போக உள்ளது . இதனால் சூர்யா மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது .

மிக பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம் 10 மொழிகள் வெளியாக உள்ளது . மேலும் 3டி தொழில்நுட்பத்தில் இந்த படம் உருவாக உள்ளது என்றும் படக்குழு அறிவித்துள்ளது . இந்நிலையில் தற்போது சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது . மோஷன் போஸ்டர் மிகவும் மாஸாக வெளியாகி உள்ளது . அனைத்து தரப்பு ரசிகர்களிடம் இந்த மோஷன் போஸ்டர் எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது .

இந்நிலையில் தற்போது இந்த படத்தில் அரத்தர் , வெண்காட்டர் , மண்டாங்கர் ,முக்காட்டர் ,பெருமனத்தார் என ஐந்து கதாபாத்திரங்களில் சூர்யா நடிக்க இருக்கிறார் என்றும் இதற்காக பல கெட்டப்களில் சூர்யாவிற்கு டெஸ்ட் போட்டோஷூட் ஏற்கனவே நடந்தது என்றும் தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது .

வழக்கமான சிவா படமாக இல்லாமல் இந்த படம் முற்றிலும் வித்தியாசமான படமாக சிவா எடுக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus