அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகும் சூர்யா !

  • August 7, 2022 / 10:23 AM IST

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்று அறியப்படுபவர் இயக்குனர் ஷங்கர் . 1993-ஆம் ஆண்டு வெளியான ஜென்டில்மேன் . இந்த படத்தில் நடிகர் அர்ஜுன் கதாநாயகனாக நடித்து இருந்தார் . காதலன் , இந்தியன் , ஜீன்ஸ் , முதல்வன் என் அடுத்து அடுத்து பல வெற்றிப் படங்களை கொடுத்து இருந்தார் . கடைசியாக இவர் இயக்கத்தில் வெளியான படம் 2.o . இந்த படம் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தி இருந்தது .இதனை தொடர்ந்து இந்தியன் 02 படத்தை இயக்கி வந்தார் . இந்த நிலையில் இந்தியன் 02 படப்பிடிப்பு பல காரணங்களால் பாதியில் நிறுத்தப்பட்டது .

இதனை தொடர்ந்து நடிகர் ராம் சரணை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார் . இந்த படத்தை பற்றி ராம் சரண் சில வாரங்களுக்கு முன் பேசி இருந்தார்.ஷங்கர் சார் எல்லாவற்றையும் மிகக் கச்சிதமாக திட்டமிட்டுள்ளார். 60 நாட்களை மிகச் சிறப்பாக படப்பிடிப்பை முடித்துள்ளார் . நான் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக நடித்து உள்ளேன் . பல வித்தியாசமான கெட்டப்பில் நடித்து இருக்கிறேன் என்றும் ராம் சரண் கூறியிருந்தார்.

இந்நிலையில் ஷங்கர் மற்றும் ராம் சரண் கூட்டணியில் உருவாகும் படத்தில் நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது . சுமார் 10 நிமிடம் சூர்யா ஒரு காட்சியில் நடிக்க இருக்கிறார் என்றும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் என்றும் கூறப்படுகிறது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus