மீண்டும் இணையும் வெற்றிக் கூட்டணி !!

  • October 19, 2022 / 10:57 PM IST

கடந்த 2020ம் ஆண்டு சூர்யா தயாரித்து நடித்த படம் தான் சூரரைப் போற்று. இந்த படத்தை சுதா கொங்கரா இயக்கி இருந்தாங்க .அமேசான் ஓ.டி.டியில் இந்த படம் வெளியானது . அந்த வருடத்தின் மிகப்பெரிய வெற்றியை அந்த படம் பெற்றுச்சி . ஜி .வி. பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் .

இந்த படம் சூர்யாவின் திரைப்பயணத்தில் முக்கியமான படமாக அமைந்தது . ஆஸ்கார் நாமினேஷன் வரை சென்று இந்திய சினிமாவுக்கு பெருமை சேர்த்தது . பல வருடமாக சரியான
வெற்றி படம் கொடுக்காமல் போராடிக்கொண்டு இருந்த நடிகர் சூர்யாவை வெற்றி பாதைக்கு
அழைத்து சென்ற படம் .

இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் மீண்டும் சூர்யா ஒரு படம் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கருதினர் . அதை உறுதிப்படுத்தும் வகையில்
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் விரைவில் அந்த படம் தொடங்கும் என்று கூறி இருந்தார் .

இந்த நிலையில் இயக்குனர் சுதா கொங்கரா மற்றும் சூர்யா இணையும் படம் மார்ச் மாதம் தொடங்கும் என்று கூறப்படுகிறது .இந்த படம் மிக பெரிய பட்ஜெட்டில் தயாராக உள்ளதாகவும் , உண்மை கதையை தழுவி எடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது . மேலும் இந்த படம் சூரரைப் போற்று படத்தை காட்டிலும் கடினமாக இருக்கும் என்று கூறியுள்ளார் . இதனால் சூரிய ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus