மீண்டும் ஓ.டி.டியில் வெளியாகிறதா சூர்யா படம் ?

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியான படம் சூரைப்போற்று . இந்த படத்தை இயக்கியவர் சுதா கொங்கரா . அபர்ணா பாலமுரளி இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து இருந்தார். ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் . மிக பெரிய வரவேற்பை இந்த படம் சூர்யாவுக்கு பெற்று தந்தது . மோகன் பாபு இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டேர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்தது . இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யப் போகிறார்கள் என்ற தகவல் வெளியானது .

இந்த நிலையில் சூரரைப்போற்று படத்தின் ரீமேக்கை நடிகர் சூர்யா மற்றும் விக்ரம் மல்ஹோத்ரா ஆகியோர் இணைந்து தயாரிக்க உள்ளனர் . இந்த நிலையில் இந்த படத்தின் பூஜை நேற்று மும்பையில் நடந்து உள்ளது . சூர்யா நடித்த மாறன் கதாபாத்திரத்தில் அக்‌ஷய் குமார் நடிக்கப்போவதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது . நடிகை அபர்ணா பாலமுரளி நடித்த கதாபாத்திரத்தில் ராதிகா மதன் நடிக்க இருக்கிறார் .

இந்த படத்திற்கும் ஜி.வி.பிரகாஷ் தான் இசையமைக்கிறார் . மேலும் இந்த படத்திற்கு புதிதாக பின்னணி இசையும் பாடலும் தயாராகி கொண்டு இருப்பதாக ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார் . மேலும் இந்த படத்தில் நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் . இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடியாத நிலையில் படத்தை பற்றின புதிய தகவல் சமூக வலைத்தளத்தில் வெளியானது . அதாவது இந்த படத்தை திரையரங்குகளில் வெளியிடாமல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெப் சீரிஸாக வெளியாக உள்ளது என்று தகவல் வெளியானது .

இந்த நிலையில் தற்போது அந்த தகவல் முற்றிலும் பொய் என்று படக்குழு மறுத்துள்ளது மேலும் படத்தை
திரையரங்குகளில் தான் வெளியிடுவோம் என்று அவர்கள் கூறி இருக்கிறார்கள் .

Share.