ஹாலிவுட் படத்தை கையில் எடுத்த லோகேஷ் !

  • December 6, 2022 / 12:50 AM IST

நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார் . தெலுங்கில் பிரபல தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜு இந்த படத்தை தயாரித்து வருகிறார் . ராஷ்மிகா நாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். பிரபு , சரத்குமார் , பிரகாஷ் ராஜ் ,குஷ்பு , ஷ்யாம் , உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து உள்ளனர் .

இந்நிலையில் வாரிசு படம் 2023 -ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது . இந்த படத்தின் முதல் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . சிம்பு குரலில் வெளியான இரண்டாவது பாடலான ” தீ தளபதி ” பாடல் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது

இது ஒரு பக்கம் இருக்க நடிகர் விஜய் அடுத்த நடிக்க உள்ள படம் தளபதி 67 படத்தின் பூஜை சென்னையில் இன்று நடந்தது . இந்த படத்தை லோகேஷ் இயக்க உள்ளார் . தயாரிப்பாளர் லலித் இந்த படத்தை தயாரிக்கிறார் . இந்நிலையில் இந்த படம் ஹாலிவுட் படமான ” ஹிஸ்டரி ஆப் வைலன்ஸ் ” படத்தின் ரீமேக் என்றும் இதை அதிகார்வப்பூர்வ ரீமேக் ரைட்ஸை 2.50 கோடிக்கு லோகேஷ் வாங்கி உள்ளார் என்று கூறப்படுகிறது .

ஆனால் இதை பற்றி படக்குழு அதிகார்வப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus