டிக் டிக் டிக் என்பது 2018 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி அறிவியல் புனைகதை திரில்லர் திரைப்படம், இது சக்தி சௌந்தர் ராஜன் எழுதி இயக்கியது. இப்படத்தில் ஜெயம் ரவி, ஆரோன் அஜீஸ் மற்றும் நிவேதா பெத்துராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர் .இந்த திரைப்படம் அதன் VFX க்காகப் பாராட்டைப் பெற்றது, ஆனால் அதன் தர்க்கத்தை மீறும் காட்சிகள் மற்றும் எழுத்துக்காக எதிர்மறை விமர்சனம் செய்யப்பட்டது . இமான் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் .
மிருதன் (2016) படத்தில் இணைந்து பணியாற்றிய பிறகு, ஜெயம் ரவி மீண்டும் சக்தி சௌந்தர் ராஜன் விவரித்த கதைக்களத்தால் ஈர்க்கப்பட்டார், மேலும் மார்ச் 2016 இல் மற்றொரு படத்தில் பணியாற்ற ஒப்புக்கொண்டார் ஜெயம் ரவி . ஜபக் மூவிஸ் இந்த முயற்சியை தயாரிக்க ஒப்புக்கொண்டது. விண்வெளி வகையின் முதல் இந்தியத் திரைப்படம் இதுவாகும் .
நடிகை நிவேதா பெத்துராஜ் செப்டம்பர் 2016 இல் படத்தின் நடிகர்களுடன் சேர்ந்தார். இவருக்கு தற்காப்புக் கலைகள் தெரிந்ததால் இந்த படத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ஜுஜுட்சு மற்றும் கிக் பாக்ஸிங்கில் பயிற்சி பெற்றவர். ஜெயம் ரவியின் மகன் ஆரவ் இப்படத்திலும் அவரது மகனாக நடித்து இருந்தார் . இந்நிலையில் இந்த படத்தின் தெலுங்கு டப்பிங் ரைட்ஸை 90 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளார் படத்தின் தயாரிப்பாளர் .