சாமி ஸ்கொயர் படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமம் இத்தனை கோடியா ?

  • October 14, 2022 / 10:08 PM IST

விக்ரம் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான படம் சாமி ஸ்கொயர் . இந்த படத்தை இயக்குனர் ஹரி எழுதி இயக்கி இருந்தார் . ஷிபு தமீன்ஸ் இந்த படத்தை தயாரித்து இருந்தது . இந்த படத்தில் விக்ரம் தந்தை மற்றும் மகனாக இரட்டை வேடத்தில் நடித்து இருந்தார் . கீர்த்தி சுரேஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தனர் . பிரபு, பாபி சிம்ஹா மற்றும் சூரி ஆகியோர் துணை வேடங்களில் நடித்து இருந்தனர் .

சாமி ஸ்கொயர் படம் 2003 ஆம் ஆண்டு வெளியான சாமி படத்தின் இரண்டாம் பாகம் ஆகும் . ஆகஸ்ட் 2016 இல், இருமுகனின் ஆடியோ வெளியீட்டு விழாவின் போது, இயக்குனர் ஹரி விக்ரமுடன் இணைவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். மேலும் 13 ஆண்டுகளுக்குப் பிறகு சாமியின் இரண்டாவது பாகம் உருவாகிறது என்ற தகவல் வெளியாகி ராசிகள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தது .

பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படம் மக்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை . இதனால் நடிகர் விக்ரம் அவர்களின் ரசிகர்களுக்கு இந்த படம் ஏமாற்றம் அளித்தது . இந்நிலையில் இந்த படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமத்தை 8 கோடிக்கு விற்று உள்ளது படக்குழு .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus