வெற்றிமாறன் – ராகவா லாரன்ஸ் படம் என்ன ஆனது ?

  • November 25, 2022 / 12:16 AM IST

பொல்லாதவன்’, ‘ஆடுகளம் போன்ற சூப்பர்ஹிட் படங்களை தயாரித்த பைஸ்டார் கிரியேஷன்ஸ் எஸ் . கதிரேசன் தற்போது ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கும் படத்தை தயாரிப்பதாக அறிவிப்பு வெளியானது . அந்த படத்தை இயக்குனர் செந்தில் குமார் இயக்குவதாக அறிவிப்பு வெளியானது . ஆனால் அந்த படம் இப்போது துவங்கவில்லை . மேலும் இந்த படத்திற்கு வெற்றிமாறன் கதை எழுதியுள்ளார் என்று கூறப்பட்டது .

இந்நிலையில் வெற்றிமாறன் விடுதலை மற்றும் வாடிவாசல் படங்களில் பிஸியாக இருக்கிறார் . மேலும் துறை செந்தில் குமார் நடிகை நயன்தாராவின் 81 வது படத்தை இயக்குவதாக அறிவிப்பு வெளியானது . இதனால் அதிகாரம் படம் கைவிடப்பட்டது என்ற தகவல் பரவியது . இதனை தயாரிப்பாளர் கதிரேசன் மறுத்துள்ளார் .

” அதிகாரம் ” படம் கைவிடப்பட்டதாக பரவும் தகவல் கேட்டு அதிர்ச்சி அடைந்தோம் . அதிகார படத்தின் ஸ்கிரிப்ட் பணிகள் மற்றும் படப்பிடிப்பு நடத்த திட்டங்கள் சுமுகமாக நடந்து வருகிறது என நாங்கள் உறுதியாக அறிவிக்கின்றோம் என்று தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் கதிரேசன் . அதுமட்டுமின்றி ஓட்டல் அறையில் கதை விவாதத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus