கோலிவுட், பாலிவுட், மாலிவுட், சாண்டல்வுட் மற்றும் டோலிவுட் ஆகியவற்றில் முன்னணி சண்டை மாஸ்டராக இருந்தவர் ஜூடோ ரத்தினம் என்றும் அழைக்கப்படும் கே.கே. ரத்தினம் . இவர் 1959 இல் தாமரைக்குளம் படத்தில் நடிகராக அறிமுகமானார், பின்னர் அவர் 1966 இல் வல்லவன் ஒருவன் திரைப்படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக அறிமுகமானார் மற்றும் 2006 இல் தலைநகரம் திரைப்படத்தில் ஓய்வு பெறுவதற்கு முன்பு நடிகராக கடைசியாக தோன்றினார்.
விக்ரம் தர்மா, சூப்பர் சுப்பராயன், தளபதி தினேஷ், ஜாகுவார் தங்கம், ராம்போ ராஜ்குமார், FEFSI விஜயன், பொன்னம்பலம், ஜூடோ போன்ற மாஸ்டர்கள் இவரிடம் இருந்து தான் உருவானார்கள் .தற்போது இவருடைய வயது 92. இவருடைய 90 வது வயதில் கலைமாமணி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஸ்டண்டு மாஸ்டர் ஜூடோ ரத்தினம்..
ரஜினி மற்றும் கமல் நடித்த பல படங்களுக்கு இவர் சண்டை மாஸ்டராக பணியாற்றி உள்ளார் . வயது மூப்பின் காரணமாக தனது சொந்த வாழ்ந்து வரும் இவரை எந்த ஒரு முன்னணி நடிகர்களும் கண்டுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது .