தோனி தயாரிக்கும் முதல் படத்தில் ஹீரோயின் யார் தெரியுமா ?

  • October 29, 2022 / 01:37 PM IST

இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர ஆட்டக்காரரும் , இந்திய சினிமாவின் முன்னாள் கேப்டனும் , சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனி கிரிக்கெட் துறையில் பல சாதனை செய்துள்ளார் .நடிகர் தோனி கிரிக்கெட்டை தவிர சினிமா மீது ஆர்வம் உடையவராக திகழ்கிறார் . இந்நிலையில் எம்.எஸ்.தோனி திரைப்பட தயாரிப்பில் ஈடுபட உள்ளார் . அதற்காக தனி தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி உள்ளார் . இந்த நிலையில் எம்.எஸ்.தோனி தமிழில் புதிய திரைப்படத்தை தயாரிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகி இருந்தது . அதில் நயன்தாராவை நடிக்க வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது .

நயன்தாரா தற்பொழுது அட்லீ இயக்கும் படம் ஒன்றில் நடித்து வருகிறார் . தோனி தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் படம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று சில மாதங்களுக்கு முன் செய்திகள் வெளியாகி இருந்தன . ஆனால் அதன் பின் எந்த ஒரு செய்தியும் இதை பற்றி வெளியாகவில்லை . இந்நிலையில் தற்போது புதிய செய்தி வெளியாகி உள்ளது .

புதிதாக தொடங்கப்பட்டுள்ள ” டோனி என்டர்டைன்மெண்ட் லிமிடெட் ” தயாரிப்பு நிறுவனத்தில் நடிகர் விஜய்யின் படத்தை தயாரிக்க தோனி திட்டமிட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது . 7 தனக்கு ராசியான எண் என்பதால் விஜய்யின் 70-வது படத்தை தயாரிக்க தோனி முனைப்பு என்று கூறப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது தோனி தயாரிக்கும் முதல் படத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி இருந்தது . தற்போது இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க உள்ளார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus