திரைப்படத்தில் நடிக்கும் பிக் பாஸ் பிரபலம் !

  • October 3, 2022 / 05:54 PM IST

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மற்றும் பிக் பாஸ் அல்டிமேட் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் தாமரை . இந்நிலையில் இவர் தற்போது தமிழ் சினிமாவில் நடித்து வருவதாக அவரே தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு உள்ளார் . இந்த செய்தி அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்து உள்ளது .

பிக் பாஸ் சீசன் 5 போட்டியில் கலந்து கொண்ட போதே இவருக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருந்தது . ரொம்பவே வெகுளியாக இவர் விளையாடியதால் இவருக்கு நிறைய மக்கள் ஆதரவு அளித்தனர் .பிக் பாஸ் சீசன் 5 மற்றும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிறகு அவர் தனது கணவருடன் இணைந்து பிக் பாஸ் பிக் பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் பங்கேற்றார் .

இந்நிலையில் பிக் பாஸ் புகழ் தாமரை தனது இன்ஸ்டா பக்கத்தில் நடிகர் மற்றும் இயக்குனர் சிங்கம் புலி மற்றும் நடிகர் ரோபோ ஷங்கர் ஆகியோருடன் இணைந்து இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். இந்த படம் படப்பிடிப்பில் எடுத்த படம் என்று தெரிகிறது . மேலும் இந்த படத்தை பற்றின தகவல் இதுவரை எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus