இந்திய சினிமாவின் மிக முக்கிய நடிகராக திகழ்ந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் . இவரின் இரண்டாவது மகன் தான் இளைய திலகம் பிரபு. இவர் 1982ம் ஆண்டு வெளியான சங்கிலி படம் மூலம் தமிழ் திரைப்பட உலகிற்கு அறிமுகமானார் . இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார் . 2003-ஆம் ஆண்டு வெளியான “பந்தா பரமசிவன்” படம் வரையில் கதாநாயகனாக நடித்து வந்தார். அதன் பிறகு துணை கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
தாமிரபரணி , சந்திரமுகி , பில்லா , அயன் என பல வெற்றி படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இளைய திலகம் பிரபுவிற்கு தமிழ் சினிமாவில் நல்ல நடிகர் என்ற பெயர் இருக்கிறது .பல இயக்குனர்கள் இவரை முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்க முயற்சி செய்தாலும் குறிப்பிட்ட படங்களில் மட்டுமே நடித்து வந்தார் ,
இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா , விஜய் சேதுபதி , சமந்தா ஆகியோர் நடித்துள்ள படம் காத்து வாக்குல ரெண்டு காதல் . இந்த படத்திலும் நடிகர் பிரபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . இதனை தொடர்ந்து இயக்குனர் செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் பிரபு .
நானே வருவேன் படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் மேலும் செல்வராகவனும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் . இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் பிரபு நடிப்பது இது தான் முதல் முறையாகும் . என்ன மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்ற ஆவல் ரசிகர்களிடையே எழுந்துள்ளது .
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus