படப்பிடிப்பில் ஐஸ்வர்யா செய்த காரியம் !

  • December 6, 2022 / 12:42 AM IST

தொலைக்காட்சிகளில் வரும் ரியாலிட்டி நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அதன் பிறகு 2012 -ஆம் ஆண்டு பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளியான அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனார் . இவர் நடிப்பில் வெளியான காக்கா முட்டை திரைப்படம் இவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல அடையாளத்தை தந்தது . இவரது நடிப்பில் ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ்,தர்மதுரை போன்ற படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது .

மேலும் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான கனா படம் இவருக்கு மேலும் நல்ல பெயரை வாங்கி தந்தது . தற்போது இவர் நடிப்பில் டிரைவர் ஜமுனா, மோகன்தாஸ், தீயவர் குலைகள் நடுங்க, தி கிரேட் இந்தியன் கிச்சன், சொப்பன சுந்தரி ஆகிய படங்கள் தயாராகி வருகிறது .

இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் தோசை சுட்ட வீடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus