கைதி 2 படத்தில் யார் வில்லன் தெரியுமா ?

  • November 22, 2022 / 04:36 PM IST

லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கி 2019 ஆம் ஆண்டு வெளியான அதிரடி திரில்லர் திரைப்படம் கைதி. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இப்படத்தை விவேகானந்தா பிக்சர்ஸ் சார்பில் திருப்பூர் விவேக் இணைந்து தயாரித்துள்ளனர். இதில் கார்த்தி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் . அவர்களுடன் நரேன், அர்ஜுன் தாஸ், ஹரிஷ் உத்தமன், ஜார்ஜ் மரியன் மற்றும் தீனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர் .

கைதி படம் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக 25 அக்டோபர் 2019 அன்று வெளியிடப்பட்டது. இது விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து நல்ல பாராட்டைப் பெற்றது. இதன் காரணமாக கைதி படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது, ₹110 கோடிக்கு மேல் வசூலித்தது. ஆகஸ்ட் 2020 இல் நடைபெற்ற சர்வதேச இந்திய திரைப்பட விழா டொராண்டோவில் (IIFFT) அதிகாரப்பூர்வ திரையிடலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது .

இந்நிலையில் கைதி படத்தின் இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு இறுதியில் தொடங்க உள்ளது . இந்நிலையில் கைதி 2 படத்தில் லாரன்ஸ் மாஸ்டர் வில்லனாக நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் இவர் ரோல்க்ஸ் கதாபாத்ரத்தின் கீழ் வேலை செய்பவராக இருப்பார் என்றும் கூறப்படுகிறது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus