சுதா கொங்கராவின் அடுத்த படம் ரத்தன் டாட்டாவின் கதையா ? இயக்குனர் சுதா கொடுத்த அப்டேட் !

  • December 5, 2022 / 01:07 AM IST

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியான படம் சூரைப்போற்று . இந்த படத்தை இயக்கியவர் சுதா கொங்கரா . அபர்ணா பாலமுரளி இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து இருந்தார். ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் . மிக பெரிய வரவேற்பை இந்த படம் சூர்யாவுக்கு பெற்று தந்தது . மோகன் பாபு இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டேர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்தது . இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யப் போகிறார்கள் என்ற தகவல் வெளியானது .

இந்த நிலையில் சூரரைப்போற்று படத்தின் ரீமேக்கை நடிகர் சூர்யா மற்றும் விக்ரம் மல்ஹோத்ரா ஆகியோர் இணைந்து தயாரிக்க உள்ளனர் . இந்த நிலையில் இந்த படத்தின் பூஜை மும்பையில் நடந்து உள்ளது . சூர்யா நடித்த மாறன் கதாபாத்திரத்தில் அக்‌ஷய் குமார் நடித்து வருகிறார் . நடிகை அபர்ணா பாலமுரளி நடித்த கதாபாத்திரத்தில் ராதிகா மதன் நடித்து வருகிறார்.

இந்த படத்திற்கும் ஜி.வி.பிரகாஷ் தான் இசையமைக்கிறார் . மேலும் இந்த படத்திற்கு புதிதாக பின்னணி இசையும் பாடலும் தயாராகி கொண்டு இருப்பதாக ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார் . மேலும் இந்த படத்தில் நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் . இந்த படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது .

இந்நிலையில் சுதா கொங்கரா பிரபல தொழிலதிபர் ரத்தன் டாட்டா அவர்களின் வாழ்க்கையை படமாக எடுக்க போகிறார் என்ற தகவல் வெளியாகி இருந்தது . இந்நிலையில் இது குறித்து தனது கருத்தை இயக்குனர் சுதா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் . அதில் ” நான் திரு. ரத்தன் டாடாவின் மிகுந்த மரியாதை உடையவள் . ஆனால், அவரது வாழ்க்கை வரலாற்றை எடுக்கும் எண்ணம் எனக்கு இப்போதைக்கு இல்லை. ஆனால் எனது அடுத்த படத்தில் உங்கள் ஆர்வத்திற்கு நன்றி! விரைவில்! என்று தெரிவித்துள்ளார் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus