விக்ரம் படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் இது தான் ?
May 26, 2022 / 02:41 PM IST
|Follow Us
மாநகரம் , கைதி , மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கியவர் நடிகர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்பொழுது நடிகர் கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கி வருகிறார் .இந்த படத்தில் நடிகர்கள் பஹத் பாசில், விஜய் சேதுபதி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‛விக்ரம்’ படம் அதிரடி ஆக்சன் கதையில் தயாராகி உள்ளது. மேலும் நடிகர் சூர்யா இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது . இதனால் படத்தின் மீதான மேலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இந்த படத்திற்கு வசனம் எழுதியுள்ளார் இயக்குனர் ரத்னா குமார் . இவர் மேயாத மான் ,ஆடை உள்ளிட்ட படங்களில் அவர் இயக்கி உள்ளார் . தற்பொழுது ” குளு குளு ” என்கிற படத்தை இயக்கி வருகிறார்.
விக்ரம் படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக ஒரு பேட்டியில் கலந்து கொண்டார் . அதில் நடிகர் சூர்யாவின் கதாபாத்திரம் பற்றி கேள்வி கேட்கப்பட்டது . அதற்கு பதில் அளித்த ரத்னா குமார் சூர்யாவின் கதாபாத்திரம் மிகுந்த வலிமையான கதாபாத்திரம் , அவர் நடித்த காட்சி வரும் போது திரையரங்கில் அனைவரும் நிச்சயம் ரசிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார் .
இந்நிலையில் விக்ரம் படம் மொத்தமாக 2 மணி நேரம் 53 நிமிடங்கள் உள்ளது என்ற தகவல் வெளியாகி இருந்தது . இந்நிலையில் விக்ரம் படத்தின் சென்சார் பற்றின தகவல் வெளியாகி இருக்கிறது.விக்ரம் படத்திற்கு யு / ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது . ரசிகர்கள் அனைவரும் ஜூன் -3ஆம் படத்தை பார்க்க ஆர்வமுடன் இருக்கிறார்கள் .
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.