தமிழ் 90களில் முன்னனி நடிகையாக இருந்தவர் குஷ்பு . இவர் தற்போது சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் . நடிகர் விஜயின் வாரிசு படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்து வருகிறார் . இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் இன்றும் இருக்கிறது . மேலும் இவர் சிறந்த நடிகையாக திகழ்கிறார் . இவர் கணவர் சுந்தர்.சி இயக்கும் படங்களையும் தயாரிக்கிறார் .
நடிகை குஷ்புவிற்கு சினிமா தாண்டி அரசியலிலும் ஆர்வம் உண்டு . தற்போது இவர் பா.ஜா.க கட்சியில் முக்கிய பங்கு வகித்து வருகிறார் . இதற்கு முன் குஷ்பூ காங்கிரஸ் மற்றும் திராவிட முன்னேற்ற காட்சிகளில் சில காலம் அங்கம் வகித்தார் . இந்நிலையில் நடிகை குஷ்பூவை பற்றி மிக மோசமாக திராவிட முன்னேற்ற கழக மேடையில் அந்த கட்சியின் பேச்சாளர் சைதை சாதிக் பேசி உள்ளார் . மேலும் அந்த மேடையில் அமைச்சர் ஒருவரும் இருந்துள்ளார் .
இதை பற்றி நடிகை குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் . மேலும் கனிமொழி மற்றும் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்களையும் டேக் செய்துள்ளார் . இந்த பதிவை பார்த்த தி.மு.க வின் துணைப் பொது செயலாளர் கனிமொழி நடிகை குஷ்பூவிடம் திராவிட முன்னேற்றம் சார்பாக மன்னிப்பு கேட்டு உள்ளார் .
மேலும் இந்த பிரச்சனை குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் . இது தான் திராவிட மாடலா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர் .