நடிகர் விஷாலின் நண்பர்களான நந்தா மற்றும் ரமணா சார்பில் ராணா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் விஷால் நடித்த படம் லத்தி.
திரையரங்குகளில் வெளியான லத்தி படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறாமல் தோல்வி அடைந்தது .லத்தி படம் நஷ்டம் அடையவே விஷாலின் நீண்ட கால நட்பிலும் விரிசல் ஏற்பட்டு உள்ளது . விஷாலுக்கு ஒரு கோடி வரை சம்பளம் பாக்கி வைத்து உள்ளனர் மேலும் படத்தில் பணியாற்றிய அவுட்டோர் யூனிட்க்கும் சம்பளம் பாக்கி வைத்து உள்ளனர் .
இது பிரச்சனை தொடர்பாக பற்றி ரமணா மற்றும் நந்தா இருவரும் வாய் திறக்காமல் அமைதியாக இருப்பது தான் விஷாலுக்கு சங்கடத்தை அளிக்கிறது. தொடர் தோல்விகளால் விஷால் துவண்டு உள்ளார் என்றும் கூறப்படுகிறது . இப்படியே இவர் நிலமை தொடர்ந்து வந்தால் சினிமா கேரியரை தொலைத்து விடுவார். அதை மனதில் வைத்துக்கொண்டு இப்பொழுது சினிமாவில் நடிப்பதற்கு முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். அதனால் இப்பொழுது சங்கமித்ரா படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மேலும் தற்போது இவர் நடித்து வரும் மார்க் ஆண்டனி படம் மீதும் பெரிய நம்பிக்கை வைத்துள்ளார் .
மேலும் துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தை அவரே இயக்கி நடிக்க உள்ளார். மீண்டும் நாயகனாக ஜெயிக்க விஷால் தீவிரமாக முயன்று வருகிறார் . அதனால் தான் லோகேஷ் இயக்கி வரும் லியோ படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் .